Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குழந்தை தொழிலாளர் மீட்பு

 குழந்தை தொழிலாளர் மீட்பு

 குழந்தை தொழிலாளர் மீட்பு


ADDED : பிப் 27, 2026 04:58 AM

Follow on Google

ADDED : பிப் 27, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு மாநில ஆணையம் மேற்கொண்ட ஆய்வில், குழந்தை தொழிலாளர் ஒருவர் மீட்கப்பட்டார்.

புதுச்சேரியில் பான் இந்தியா குழந்தை மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுச்சேரி யூனியன் பிரதேச குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான மாநில ஆணையம் தலைமையில், மாவட்ட கண்காணிப்பு குழு சோதனை மேற்கொண்டது.

மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் துறை, போலீஸ் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து நடத்திய சோதனையில் புதுச்சேரி நகர பகுதியில் ஒரு வணிக நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்கப்பட்டிருந்த ஒரு குழந்தை தொழிலாளர் மீட்கப்பட்டார்.

இந்த மீட்பு நடவடிக்கை, ஆணைய தலைவர் சிவராமன் மேற்பார்வையில் நடந்தது. மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக குழந்தைகள் நலக்குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பாதுகாப்பான பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.

தலைவர் சிவராமன் கூறுகையில், 'குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி முழுதும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும், குழந்தை தொழிலாளர்கள் குறித்த தகவல்களை, பொது மக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையம் அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரவிக்கலாம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap