Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களே கம்பெனிகளுக்கு தேவை: அஸ்வின்

 பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களே கம்பெனிகளுக்கு தேவை: அஸ்வின்

 பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களே கம்பெனிகளுக்கு தேவை: அஸ்வின்


ADDED : ஏப் 05, 2026 06:22 PM

Follow on Google

ADDED : ஏப் 05, 2026 06:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: 'பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களையே கம்பெனிகள் தேர்வு செய்வார்கள்' என கல்வி ஆலோசகர் அஸ்வின் பேசினார்.

புதுச்சேரியில் நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நீங்கள் எந்த துறைகளை தேர்ந்தெடுத்து படித்தாலும், எந்த துறை தொடர்பான தேர்வு எழுதினாலும் முக்கியமான ஒன்று பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய 'பிராப்ளம் சால்விங் எபிலிட்டி ஸ்கில்ஸ்' இதனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது தொடர்பான கேள்விகள் தான், ஐ.டி., - ஐ.ஏ.எஸ்., - ஆர்.ஆர்.பி., தேர்வுகளில் கேட்கப்படுகிறது. மிகப்பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்களாக இருக்க வேண்டுமென்றால், பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களையே கம்பெனிகள் தேர்வு செய்வார்கள். படிக்கும்போதே பாடங்களை கவனிக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி படிக்க வேண்டும். தோல்வியடைந்த நிறைய பேர் வகுப்பை கவனிக்காதவர்கள் தான். ஆங்கிலம் பேசும் திறமை வளர்த்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் படித்தால், வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும்.

வேளாண் துறை, மீன்வளத் துறை, கால்நடைத் துறை தொடர்பான பாடங்களை படிக்கலாம். பி.எஸ்சி., அக்ரிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. தோட்டக்கலைத் துறை, வனத்துறை சார்ந்த காடுகளை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தல், பட்டுப்பூச்சி வளர்ப்பு, வடிவமைப்பு துறைகளில் படிக்கலாம்.

ராணுவம், கடற்படை, விமானப் படை உள்ளிட்ட பாதுகாப்புத் துறை சார்ந்த படிப்புகளை படிக்கலாம். ராணுவத்தில் பெண்கள் நர்சிங் கோர்ஸ் படிக்கலாம். பெட்ரோலியம் தொடர்பான துறைகளைப் படித்தால், உடனடியாக அரசு வேலை கிடைக்கும். முக்கியமான பாடங்களை படித்து நுழைவு தேர்வுகளை எழுத வேண்டும்.

நல்ல கல்லுாரிகளைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். அரசு தேர்வுகளுக்கு முதலாம் ஆண்டு படிக்கும் போதே தயாராக வேண்டும். சுற்றுலாத்துறை பாடங்களை படித்தால், மத்திய அரசே பணி வழங்குகிறது.

கல்லுாரிகளுக்கு அட்மிஷன் போடுவதற்கு முன், நேரடியாக சென்று, அங்கு படிக்கும் மாணவர்களிடம் விசாரிக்க வேண்டும். அப்படி நல்ல கல்லுாரியில் படித்தால், நல்ல வேலை கிடைக்கும். ஆண்டுதோறும் 'தினமலர்' நாளிதழ், மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்து வருவதை பாராட்டுவோம்.

இவ்வாறு அஸ்வின் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap