ADDED : டிச 09, 2024 04:47 AM
அ நிறம் | அளவு
சாலையில் திரியும் மாடுகள்
வில்லியனுார் முக்கிய சாலைகளில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஜினி முருகன், வில்லியனுார்.
வாகன ஓட்டிகள் அவதி
வழுதாவூர்- குமாரப்பாளையம் செல்லும் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கருணாகரன், குமாரப்பாளையம்.
சுகாதார சீர்கேடு
புதுக்குப்பம் - கொடுக்கூர் செல்லும் சாலையில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பரதன், கொடுக்கூர்.
மின் விளக்கு எரியுமா?
பத்துக்கண்ணு - பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையில் தெருமின் விளக்குகள் எரியவில்லை.
கண்ணன், பிள்ளையார்குப்பம்.





