நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்திற்கு இடையூறு
ராஜ்பவன், ஈஸ்வரன் கோவில் தெரு, பாரதி வீதி கட்டிங்கில் கழிவு நீர் வாய்க்கால் சிலாப் உள்வாங்கி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
கணபதி,ராஜ்பவன்.
வாய்க்காலில் குப்பை குவியல்
கல்மேடு, செண்பகா நகர் வாய்க்காலில் குப்பைகள் குவிந்து, புதர்மண்டி கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
ஆனந்தன், கல்மேடு.
குடிநீர் விரயம்
புதுச்சேரி, புதுசாரம் முதல் தெரு சந்திப்பில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகிறது.
நிர்மலாதேவி, புதுசாரம்.
போக்குவரத்து நெரிசல்
தட்டாஞ்சாவடியில் இருந்து வழுதாவூர் செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக பார்க்கிங் செய்யப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கந்தன்,தட்டாஞ்சாவடி.
பூமியான்பேட்டை, ராகவேந்திரா நகர் பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஏழுமலை, பூமியான்பேட்டை.

