/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாறுமாறாக ஓடிய கார் பைக் மீது மோதல் போதை நபர்களுக்கு தர்ம அடி புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் பரபரப்பு
/
தாறுமாறாக ஓடிய கார் பைக் மீது மோதல் போதை நபர்களுக்கு தர்ம அடி புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் பரபரப்பு
தாறுமாறாக ஓடிய கார் பைக் மீது மோதல் போதை நபர்களுக்கு தர்ம அடி புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் பரபரப்பு
தாறுமாறாக ஓடிய கார் பைக் மீது மோதல் போதை நபர்களுக்கு தர்ம அடி புதுச்சேரி-திண்டிவனம் பைபாசில் பரபரப்பு
ADDED : பிப் 06, 2024 05:58 AM

வானுார் : ஆரோவில் அருகே பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் பைக் மீது மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய மூவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி நேற்று காலை 11:00 மணியளவில் டிஎன்.13-எச்-5593 பதிவெண் கொண்ட 'பிகோ' கார் சென்று கொண்டிருந்தது.
காரில் டிரைவர் உட்பட 4 பேர் இருந்தனர். திண்டிவனம் - புதுச்சேரி பைபாசில், துருவை, சாய்பாபா கோவில் சந்திப்பை கடந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி எதிர் திசையில் 200 மீட்டருக்கு சீறி பாய்ந்தது.
அப்போது, எதிரே புதுச்சேரி நோக்கி 'யூனிகார்ன்' பைக்கில் வந்த ராவுத்தன்குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜ், 48; மீது மோதியது. இதில் கிருஷ்ணராஜூக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காரில் இருந்த நால்வரும் காயமின்றி தப்பினர்.
விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள், காயமடைந்த கிருஷ்ணராஜை மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்த நால்வரையும் பிடித்ததில் ஒருவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட 3 பேருக்கும் தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்த ஆரோவில் போலீசார் விரைந்து சென்று, பொதுமக்களிடம் இருந்து மூவரையும் மீட்டு விசாரித்தனர்.
அதில், அவர்கள் வேலுார் பெருமுகையை சேர்ந்த அருண்குமார்,26; விழுப்புரம் மாவட்டம், வளத்தி புகழேந்தி,23; திருச்சி, பாலக்கரை சையத் முகமது அலி,25; என்பதும் மூவரும் வேலுார் சட்டக்கல்லுாரி மாணவர்கள் என்பதும், தப்பியோடியவர் வேலுாரைச் சேர்ந்த டிரைவர் தினேஷ்,30; என்பதும் தெரிந்தது.
இவர்கள், நேற்று முன்தினம் இரவு புதுச்சேரிக்கு வந்ததும், நேற்று காலை வரை மதுஅருந்தி விட்டு, போதையில் கார் ஓட்டி வந்ததால் விபத்து நடந்தது தெரிய வந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

