Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காமராஜர் நகர் தொகுதியில் காங்., வேட்பாளர் தேவதாஸ் பிரசாரம்

 காமராஜர் நகர் தொகுதியில் காங்., வேட்பாளர் தேவதாஸ் பிரசாரம்

 காமராஜர் நகர் தொகுதியில் காங்., வேட்பாளர் தேவதாஸ் பிரசாரம்


ADDED : மார் 25, 2026 07:48 AM

Follow on Google

ADDED : மார் 25, 2026 07:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, காங்., வேட்பாளர் தேவதாஸ் உறுதியளித்தார்.

காமராஜர் நகர் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில், காங்., வேட்பாளரும், மாநில காங்., சீனியர் துணை தலைவருமான தேவதாஸ் பேசியதாவது;

தொகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, ஒவ்வொரு வார்டுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, அந்த நிதி அந்த வார்டின் தேவைகளுக்கு ஏற்ப நேரடியாக பயன்படுத்தப்படும். சாலை, குடிநீர், வடிகால், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். சிறிய பிரச்னைகள் உடனே தீர்வு காணப்படும். அனைத்து வளர்ச்சி பணிகளையும் கண்காணிக்கும் வகையில் எம்.எல்.ஏ., மற்றும் மக்கள் கண்காணிப்பு குழு அமைப்பு உருவாக்கப்படும்.

இதில், ஒவ்வொரு வார்டிலிருந்தும் பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் சேர்க்கப்படுவர். சமூக பிரதிநிதிகள், தொழிலாளர்கள், பெண்கள் குழுக்கள் இணைப்பு செய்யப்படும். அரசு பணிகள் தரமாக நடக்கிறதா, நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா, திட்டங்கள் குறித்த நேரத்தில் முடிவடைகிறதா என கண்காணிக்கப்பட்டு, மக்களின் புகார்கள் உடனே தீர்வு காணப்படும்.

தரமான சாலைகள் அமைத்தல், மழைநீர் தேங்காமல் செல்லும் முறையான வடிகால் திட்டம் உருவாக்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் 24 மணி நேரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கசிவு மற்றும் மாசு ஏற்படுத்தும் பழைய குழாய்கள் மாற்றப்படும். புதிய தரமான குழாய்கள் அமைக்கப்படும்.

ஒவ்வொரு வார்டிலும் மக்கள் வீட்டிலிருந்தே மாதிரி கொடுத்து பரிசோதனை செய்திட, இலவச நீர் பரிசோதனை முகாம்கள் அமைக்கப்படும். காமராஜர் நகரில், காய்ச்சல், சளி, தலைவலி போன்ற சாதாரண நோய்களுக்கு சிகிச்சை இலவச மருந்துகள், ரத்த பரிசோதனை உள்ளிட்ட டெஸ்ட்கள். கர்ப்பிணி மற்றும் குழந்தை பராமரிப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும். தொகுதி முழுதும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கிய இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படும்.

காமராஜ் நகர் தொகுதியில் மக்களுக்கு இடையூறாக இருக்கும் ரெஸ்டோ பார்கள் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap