தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்த மூதாட்டியின் கண்கள் தானம்

 இறந்த மூதாட்டியின் கண்கள் தானம்

 இறந்த மூதாட்டியின் கண்கள் தானம்


ADDED : பிப் 09, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 04:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மூலக்குளத்தில் இறந்த மூதாட்டியின் கண்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

மூலக்குளம், ஜான்குமார் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி சரோஜினி, 81. உடல்நலம் குறைவு காரணமாக கடந்த 6ம் தேதி இறந்தார்.

இறந்த சரோஜினியின் கண்களை மகன் ரமேஷ், மருமகள் ஜெயசித்ரா, மகள் பிரியா, மருமகன் கோதண்டராமன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தானம் செய்ய முன்வந்தனர்.

இதுகுறித்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனாரை தொடர்பு கொண்டு தெரிவித்த நிலையில், அவர் அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, டாக்டர் சஞ்சனா தலைமையில் செவிலியர்கள் பாண்டிச்செல்வி, ஸ்வேதா ஆகியோர் சரோஜினி வீட்டிற்கு சென்று அவரது கருவிழிகளை சேகரித்தனர்.

சரியான நேரத்தில் கண் தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி கண் தானம் செய்ய குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தை பெற உறுதுணையாக இருந்த அவரின் மகன் ரமேஷ்க்கு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த வாரம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை மூலம் மூன்று நபர்களிடம் இருந்து கண் தானம் பெறப்பட்டது குறிப்பிடத்கக்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us