/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சண்டே மார்க்கெட் வீதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை
/
சண்டே மார்க்கெட் வீதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை
சண்டே மார்க்கெட் வீதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை
சண்டே மார்க்கெட் வீதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை
ADDED : ஜன 23, 2024 04:38 AM
புதுச்சேரி : சண்டே மார்க்கெட் தினத்தில் காந்தி வீதி வழியாக கனரக வாகனங்கள் செல்வதற்கு போக்குவரத்து போலீசார் தடை செய்ய வேண்டும்.
இது குறித்து, சாலையோர வியாபாரிகள் சங்க ஐ.என்.டி.யூ.சி., பொறுப்பாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக சண்டே மார்க்கெட் இயங்கி வருகிறது. வாரத்தில் ஒரு நாள் நடக்கும் சண்டே மார்க்கெட்டில், பொருட்கள் வாங்குவதற்கு, புதுச்சேரி, தமிழக மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்கு அனைத்து பொருட்களும் கிடைப்பதால், சண்டே மார்க்கெட் தினத்தில் கூட்ட நெரிசல் ஏற்படும்.
சண்டே மார்க்கெட் வியாபாரத்தால், ஓட்டல் கடைகள், சிற்றுண்டிகள், மதுபானக் கடைகள் என பல கடைகளில் வியாபாரம் நடந்து வருகிறது. இதனால் அரசுக்கு அதிக வருமானம் கிடைத்து வருகிறது.
இந்த தினத்தில் காந்தி வீதி வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது, வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
அதனால், புஸ்சி வீதியில் இருந்து காந்தி வீதி வழியாக அஜந்தா சிக்னல் வரை கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் பேரிகார்டு அமைத்து தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

