Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்

 புதுச்சேரியில் ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்

 புதுச்சேரியில் ரூ.2,714 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்


ADDED : மார் 01, 2026 04:41 AM

Follow on Google

ADDED : மார் 01, 2026 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி 2,714 கோடிக்கான வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, இன்று (1ம் தேதி), புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் காலை 11:30 மணி முதல் மதியம் 1:00 மணி நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அப்போது அவர், புதுச்சேரியின் 2,713.96 கோடிக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைப்பதுடன், முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதில், 1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், ரூ.1,142.23 கோடி மதிப்பிலான 19 முக்கிய திட்டங்களைத் துவக்கி வைப்பதும் அடங்கும்.

ரூ.1,571.73 கோடிக்கு அடிக்கல் புதுச்சேரி பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக ஏ.எப்.டி., நிதி உதவியுடன் ரூ.179.68 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகத் திட்டம் துவக்கப்பட உள்ளது.

இதனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் புதுச்சேரி அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டுக்கான சி றப்பு உதவித் திட்டத்தின் கீழ், ரூ. 315.25 கோடி மதிப்பிலான 37 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் நகர்ப்புற சாலைகள், வடிகால், பொது கட்டடங்கள் மேம்பாடு அடங்கும்.

மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் ரூ.253.84 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இதில், 107.84 கி.மீ நீளமுள்ள 41 கிராமப்புற சாலைகள், புதுச்சேரி பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் அலையாத்திக் காடுகள் மறுசீரமைப்பு ஆகியவை முக்கியமானவை.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ், கடன் உதவியுடன் ரூ.175.87 கோடி மதிப்பிலான குடிநீர், சுகாதாரம், கிராமப்புற சாலைகள் 17 திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மின் அமைச்சகத்தின் மேம் படுத்தப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ், ரூ. 646.84 கோடி மதிப்பிலான பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

கரசூர் தொழிற்பேட்டை 750 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பேட்டை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இங்கு மருந்து பூங்கா, ஜவுளி பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் ஜிப்மரின் அதிநவீன சுகாதார வசதிகள் அமைய உள்ளன. இது, 40,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் யூனியன் பிரதேசத்தின் முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.1,142 கோடிக்கு திறப்பு விழா பிரதமர் தனது வருகையின் போது, ரூ.1,142.23 கோடி மதிப்பிலான 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். முக்கிய திட்டங்களில் 'பிஎம் இ--பஸ் சேவா திட்டத்தின் கீழ், மின்சார பஸ்கள் இயக்கம் துவக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி கீழ் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட உள்ளது. மேலும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான குடியிருப்புகள் மற்றும் புதுச்சேரி அரசின் கழிவுநீர் மற்றும் குடிநீர் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

மேலும், பிரதமர் வருகையின்போது மத்திய அரசு நிறுவனங்களின் திட்டங்கள் திறப்பு விழா நடத்தப்பட உள்ளது. 173 கோடியில் கட்டடப்பட்ட காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அப்துல் கலாம் பொறியியல் வளாகம் மற்றும் கங்கா விடுதி, 95 கோடியில் கட்டப்பட்ட ஜிப்மரில் மண்டல புற்றுநோய் மையம், 110.56 கோடியில் கட்டடப்பட்ட புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் புதிய கூடுதல் கட்டடங்கள், விரிவுரை அரங்குகள் மற்றும் விடுதிகள் ஆகியவையும் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட உள்ளன.

இந்த திட்டங்கள் நிலையான நகர்ப்புற போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் வருகையொட்டி, புதுச்சேரி முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விழா நடக்கும் லாஸ்பேட்டை ெஹலிபேட் மைதானம் முழுவதும் சிறப்பு படையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பிரதமர் புதுச்சேரி வருகை

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு

பிரதமர் நரேந்திர மோடி வருகை தொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'பிரதமரின் இந்த வருகை, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி் பயணத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இந்த வருகையால், பல எதிர்காலத் திட்ட அறிவிப்புகளை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதும், ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும், புதுச்சேரியின் விரிவான வளர்ச்சியில் ஒரு பெரிய முன்னோடியாக அமையும். பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ் எதிர்பார்க்கப்படும் எதிர்கால நோக்குடைய மக்கள் நலத் திட்டங்களுடன் சேர்ந்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நீண்டகால மற்றும் விரைவான சமூக-பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுக்கும். மத்திய அரசு மற்றும் புதுச்சேரி அரசின் 'இரட்டை இஞ்சின் செயல்பாட்டையும், பிரதமரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பையும் இந்த வருகை மீண்டும் உறுதிப்படுத்தும். இது அனைவரையும் உள்ளடக்கிய, வாழத்தகுந்த, துாய்மையான, பசுமையான மற்றும் வளர்ந்த புதுச்சேரியை நோக்கி நம்மை அழைத்துச் சென்று, வளர்ந்த இந்தியா - 2047 இலக்கை அடைவதற்கு பங்களிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரோவில் ஆன்மிக மகோற்சவம்

ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோவில்லில் நடக்கும் உலகளாவிய ஆன்மிக மகோத்சவம்- 202-ஐ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட ஆன்மிக தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap