ADDED : ஜூன் 26, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, திப்புசாய்பு வீதியை சேர்ந்தவர் எலிசபத் ழீல், 33; டாக்டரான இவர், வ.உ.சி., வீதியில் பல் மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார்.
இவரது கிளினிக் வாசலில், பக்கத்து வீடுகளில் பயன்படுத்தும் கழிவுநீர் வந்து தேங்குவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. நேற்று முன்தினம் எலிசபத் ழீல், கிளினிக் எதிரே தேங்கிய கழிவுநீரை அகற்றியபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மனோகர் மற்றும் ஆஷீக் ஆகியோர், எலிசபத்திடம் தகராறில் ஈடுபட்டனர்.
புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.