Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி

 மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி

 மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி


ADDED : பிப் 12, 2026 04:41 AM

Follow on Google

ADDED : பிப் 12, 2026 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டுச் சங்கம், புரூஸ்லீ டேக்வாண்டோ கிளப் சார்பில், மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது.

லாஸ்பேட்டை மல்டி பர்ப்பஸ் இன்டோர் ஹாலில் க்யோருகி மற்றும் பூம்சே ஆகிய பிரிவுகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. அப்சர்வராக சர்வதேச நடுவர் பகவத்சிங் நியமிக்கப்பட்டிருந்தார்.

நடுவர் குழு இயக்குநராக தட்சிணபிரியா செயல்பட்டார். 20க்கும் மேற்பட்ட விளையாட்டு சங்கங்கள் மற்றும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று விளையாடினர்.சங்கங்களுக்கு இடையிலான ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மேஜிக் லெக் மார்ஷியல் ஆர்ட் கிளப் முதல் இடத்தையும், புதுச்சேரி டேக்வாண்டோ மார்ஷியல் ஆர்ட் கிளப் இரண்டாம் இடமும், புத்தா சாம்பியன் டேக்வாண்டோ கிளப் மூன்றாம் இடமும் பிடித்தன.

பள்ளிகளுக்கு இடையிலான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியில், வாசவி இன்டர்நேஷனல் பள்ளி முதல் இடம், குளூனி சி.பி.எஸ்.சி., பள்ளி இரண்டாம் இடம், கிரிஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி மூன்றாம் இடம் பிடித்தன.

பரிசளிப்பு விழாவில், சங்க நிறுவனத் தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

செயலாளர் மஞ்சுநாதன் முன்னிலை வகித்தார். முதன்மை விருந்தினராக தொழிலதிபர் புவனேஸ்வரன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அக்ரி கணேசன், தர்மேந்திரபாபு, ராஜேந்திரன், அருள், கோஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். தேவிப்பிரியா வரவேற்றார். தமிழரசி நன்றி கூறினார்.

மதன், ஹரிஹரன், செல்வரசி, மஞ்சுளா தேவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஏற்பாடுகளை சிலம்பரசன், ஜெகதீசன் மற்றும் பாலானந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap