ADDED : ஜன 23, 2024 11:19 PM

புதுச்சேரி : மத்திய, மாநில அரசை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் முன், தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களிடம் தெரிவிக்கும் வகையில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் தொகுதி வாரியாக நடத்தப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்காக முடங்கி உள்ளதிட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவது போல்அரசு அதிகாரிகளை கொண்டு பொய் பிரசாரம் செய்வதாகவும், அதற்கு அனுமதி அளித்த கலெக்டரை கண்டித்து, தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.
அரசு அதிகாரிகளை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் மத்திய அரசையும், புதுச்சேரி கவர்னர், முதல்வர், தலைமை செயலர், கலெக்டரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, சண்குமாரவேல், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், லோகையன், ஆறுமுகம், காந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

