தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு

பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு


ADDED : ஜூலை 12, 2025 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காக, 10 சதவீத பி.டெக்., இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.

இவர்களுக்கான சென்டாக் லேட்ரல் என்ட்ரி சேர்க்கை விண்ணப்ப படிவங்கள், கடந்த மாதம் 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை ஆன்-லைனில் (www.centacpuducherry.in) வினியோகிக்கப்பட்டது. மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித் தனர்.

மாணவர்களின் கோரிக் கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது.

விண்ணப்பங்களை பரிசீலனை செய்த சென்டாக் தற்போது வரைவு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் ஆட்சேபனைகள் இருந்தால், மாணவர்கள் தங்களுடைய டேஷ்போர்டு வழியாக 15ம் தேதி மாலை 3:00 மணிக்குள் தெரிவிக்கலாம். இதேபோல் முதல் கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கப்பட உள்ளது.

எனவே மாணவர்கள் தங்களுடைய கோர்ஸ் முன்னுரிமையை 18ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கொடுக்கலாம்.

கோர்ஸ் முன்னுரிமை கொடுக்காவிட்டால் அம்மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்படாது என்று சென்டாக் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us