தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்கால் தடுப்பு சுவர் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 வாய்க்கால் தடுப்பு சுவர் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

 வாய்க்கால் தடுப்பு சுவர் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : டிச 16, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: குருவிநத்தம் சித்தேரி வாய்க்காலில், ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் செலவில், பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், பாகூர் தொகுதிக்குட்பட்ட குருவிநத்தம் கிராமத்தில் சித்தேரி வாய்க்காலில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன், பணி ஒப்பந்ததாரர் வெற்றிவெல் மற்றும் தி.மு.க., தொகுதி நிர்வாகிகள், பிரமுகர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us