/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 26, 2025 01:21 AM

அரியாங்குப்பம் : போலீசார் சார்பில், போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் அதன் தீமைகள் பற்றி தவளக்குப்பம் அரசு பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தவளக்குப்பம் போலீசார் சார்பில், போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் அவற்றினால் ஏற்படும் தீமைகள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.