/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 25, 2025 01:02 AM

அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் சிங்காரவேலர் அரசு உயர்நிலைப் பள்ளியில், அரியாங்குப்பம் போலீசார் சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், போதை பொருட்களின் ஏற்படும் தீமைகள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது குறித்து, மாணவர்களிடம் சிறப்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, போலீசார் மாணவர்களுக்கு பேனா, பென்சில் வழங்கினர். நிகழ்ச்சியை தொடர்ந்து, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, மாணவர்கள் பதாகைகள் ஏந்தி, விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், நான்கு வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியை அடைந்தனர்.
நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் துணை சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.