/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'புதுச்சேரியில் கல்வி வளர்ச்சி குறைந்துள்ளது' : எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு

ADDED : ஜன 23, 2024 11:18 PM
புதுச்சேரி : மத்திய மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பாளர் சிவா பேசியதாவது;
ஏழை எளிய மக்களிடம் கழிப்பிடம் கட்ட 2,284 பயனாளிகளுக்கு பணம் கொடுக்காமலே, கொடுத்ததாக கூறிகொள்ளையடித்துள்ளனர்.
ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் புதுச்சேரியில் ஒருவர் பயன்பெற்றிருந்தால், ரூ. 1 லட்சம் தருகிறேன். காப்பீடு திட்டம் அட்டையை காண்பித்தால், தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஏற்க மறுக்கிறது. ஜிப்மரில் கூட ஏற்றுக் கொள்வதில்லை.
புதுச்சேரியில் பா.ஜ., - என்.ஆர்., ஆட்சிக்கு வந்த 3 ஆண்டில் கல்வி வளர்ச்சி குறைந்துள்ளது. இந்த ஆட்சி வந்த பின்பு ஒரு பள்ளி கூடம், கல்லுாரி, வகுப்பறை கூட கட்டியது இல்லை. புதுச்சேரியில் தொழிற்சாலைகளை மூடிவிட்டு பலர் செல்கின்றனர். மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சுடுகாடாக மாறி உள்ளது.
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலம் கட்ட நிதி பெறவில்லை. சுண்ணாம்பாறு படகு குழாமை காலி செய்ய அருகில் தனியார் படகு குழாமிற்கு லைசன்ஸ் கொடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு செய்துள்ளனர்.
அரசு அதிகாரிகள் மூலம் தேர்தல் பிரசாரம் செய்வதும், பா.ஜ., கொடி கட்டும் செயல் கண்டிக்கதக்கது.நாம் அனைவரும் இந்து. ராமர் எனது குலதெய்வம். சாமி கும்பிடுவதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அதை வியாபாரமாக ஆக்க கூடாது.
இவ்வாறு அவர், பேசினார்.