/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மறைந்து போன வாழ்த்து அட்டை கலாசாரம் அரசு பள்ளியில் மீட்டெடுக்க முயற்சி
/
மறைந்து போன வாழ்த்து அட்டை கலாசாரம் அரசு பள்ளியில் மீட்டெடுக்க முயற்சி
மறைந்து போன வாழ்த்து அட்டை கலாசாரம் அரசு பள்ளியில் மீட்டெடுக்க முயற்சி
மறைந்து போன வாழ்த்து அட்டை கலாசாரம் அரசு பள்ளியில் மீட்டெடுக்க முயற்சி
ADDED : ஜன 14, 2024 03:46 AM

10 ஆண்டுகளுக்கு முன் வரை, பொங்கல் பண்டிகை, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் கடைகள், தபால் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளின் விற்பனை அமோகமாக இருக்கும். தற்போது இ-மெயில், பேஸ்புக்,'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட மின்னணு தகவல் பரிமாற்றங்களின் வளர்ச்சிக்கு பிறகு வாழ்த்து அட்டை பரிமாற்றம் முற்றிலும் மறைய துவங்கி விட்டது.
மறைந்து வரும் வாழ்த்து அட்டை அனுப்பும் கலாசாரத்தை மீட்டெடுக்கும் விதமாக அரும்பார்த்தபுரம் திரு.வி.க., அரசு உயர் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
100 மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தாங்கள் தயாரித்த வாழ்த்து அட்டைகளை தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
வாழ்த்து அட்டை தயாரிக்க பயிற்சி அளித்த ஓவிய ஆசிரியர் அன்பழகன் கூறுகையில், 'உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் எழுத்துகளில் கொட்டி மனதிற்கு பிடித்தவர்களுக்கு அனுப்பும் வாழ்த்து அட்டை பற்றி பள்ளி மாணவர்களுக்கு சுத்தமாக தெரியவில்லை. ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவது குறித்தும் தெரியவில்லை. அவர்களை சொல்லி பலனில்லை. வாழ்த்து அட்டை தயாரிப்பு நின்றுவிட்டது.
கடைகளில் கூட இப்போது கிடைப்பதில்லை. வாழ்த்து அட்டைகளை பற்றி எடுத்துரைத்தபோது, ஓ... அப்படியானு ஆச்சரியமாக கேட்டறிந்தனர். எனவே வாழ்த்து அட்டைகளின் பெருமையை எடுத்து கூறி, தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை விரைவாக கற்றுக்கொண்டு வாழ்த்து அட்டைகளை தயாரித்தனர். உணர்வுபூர்வமான திருவிழாக்களை வாழ்த்து அட்டைகளுடன் தொடருவோம்' என்றார்.

