
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்களத்தை சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி சுசீலா, 62; இவரும், சான்றோர்பாளையத்தை சேர்ந்த வைத்தியநாதன் மனைவி தமிழரசி, 45; என்பவரும் நேற்று காலை, கடலூர் - சிதம்பரம் சாலையில், சிலம்பிமங்களம் பஸ் நிறுத்தத்தில், பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது கடலூரிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ், அவர்கள் மீது மோதியது. இதில், சுசீலா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காயமடைந்த தமிழரசி, சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

