Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

 தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி முகாம்

 தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி முகாம்


ADDED : பிப் 10, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:09 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம், தட்சிணாமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் வீரக்குமார் தலைமை தாங்கினார். ஆங்கில ஆசிரியர் அஷ்ரப் வரவேற்றார். ஆசிரியர்கள் இக்பால் பாஷா, பெனடிக் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உழவர்கரை தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்து, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு மற்றும் மத்திய, மாநில அரசுகள் உயர் பதவிகளுக்காக நடத்துகின்ற போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையோடு எழுதும் முறைகள் குறித்து பேசினார்.

எழுத் தாளர் அரிமதி இளம்பரிதி, தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளும் முறைகள், படைப்புத் திறன்களின் முக்கியத்தும், கூடுதல் மொழித் திறன், உயர் கல்வி, நினைவாற்றல் மற்றும் தொழில் நுட்ப மேலாண்மை குறித்து பேசினார். தமிழ் ஆசிரியை பெபினா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலந்துரையாடல் நடந்தது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அறிவியல் ஆசிரியர் தேவி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us