ADDED : அக் 04, 2025 06:53 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம் : விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் உதயகுமார், 66; விவசாயி. இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார்.
மருத்துவமனையில், சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியில் இருந்தார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி, வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
