sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீட்டுமனை பட்டா கேட்டு உண்ணாவிரதம்

/

வீட்டுமனை பட்டா கேட்டு உண்ணாவிரதம்

வீட்டுமனை பட்டா கேட்டு உண்ணாவிரதம்

வீட்டுமனை பட்டா கேட்டு உண்ணாவிரதம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் வீடு இல்லாதவர்கள், மனைப்பட்டா கேட்டு நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுசாரம், அவ்வை திடலில், வீட்டு மனைப்பட்டா கேட்டு, லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த வீடு இல்லாதவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மூத்த கம்யூ., தலைவர் முருகன் துவக்கி வைத்தார்.

செண்பக விநாயகர் கோவில் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் வாசு தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், லாஸ்பேட்டை, செண்பக விநாயகர் கோவில் தெருவில், 29 கூலி தொழிலாளர் குடும்பங்கள்,கடந்த 40 ஆண்டுகளாக, வசித்து வருகிறோம்.

அந்த இடத்திற்கு பட்டா கேட்டு கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இது குறித்து பல கலெக்டர்களிடம் மனு அளித்தும் பலனில்லை. அதனால், குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருந்து எங்கள் நிலையை, ஆட்சியாளர்களுக்கு புரிய வைக்கிறோம். அங்கு வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் புதுச்சேரி அரசு மனைப்பட்டா வழங்க வேண்டும் என, கூறினர்.

உண்ணாவிரத போராட்டத்தை, மாலை 6:00 மணிக்கு, மா.கம்யூ., மாநில செயலாளர் ராஜாங்கம் முடித்து வைத்தார்.




    • Dinamalar Events


    Dinamalar