ADDED : ஜன 16, 2025 05:53 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேதராப்பட்டு பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனியம்மாள் 51, கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
