ADDED : மே 24, 2025 11:29 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம் : மீனவர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராமன், 47, இவர் நேற்று காலை புதுக்குப்பத்தில் இருந்து படகை எடுத்து கொண்டு, வீராம்பட்டினத்திற்கு சென்றார்.
படகை ரூபி பீச் அருகே நிறுத்தி விட்டு சென்றவர் மாலை வரை வீடு திரும்ப வில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





