/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனையில் அங்கன்வாடி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
/
திருபுவனையில் அங்கன்வாடி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
திருபுவனையில் அங்கன்வாடி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
திருபுவனையில் அங்கன்வாடி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஜன 19, 2024 07:44 AM

திருபுவனை: திருபுவனையில், அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
வைத்திலிங்கம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி 14 லட்சம் ரூபாயில் அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை விழா நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுன், இளநிலை பொறியாளர் மனோகரன், திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்க தலைவர் பாண்டியன், திருபுவனை வட்டார காங்., தலைவர் ஜெயக்குமார், பா.ஜ., மண்டல பொறுப்பாளர் பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.