/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டியல் வகுப்பு இளைஞர்களுக்கு 'பாட்கோ' மூலம் இலவச பயிற்சி; அங்காளன் எம்.எல்.ஏ., கவர்னருக்கு மனு

ADDED : ஜூன் 25, 2025 03:12 AM

புதுச்சேரி : புதுச்சேரி பட்டியல் வகுப்பு இளைஞர்களுக்கு 'பாட்கோ' மூலம் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கக் கோரி அங்காளன் எம்.எல்.ஏ., கவர்னர் கைலாஸ்நாதனை சந்தித்து மனு அளித்தார்.
மனுவில், மத்திய அரசு பட்டியல் இன மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக் காக சிறுப்பு கூறுகள் திட்டத்தை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி புதுச்சேரி அரசு பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடி மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக ரூ.526 கோடி நிதியை 2025-2026ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
பட்டியல் வகுப்பு மக்களின் வளர்ச்சிக்காக தனி திட்டங்கள் தீட்டவும், சிறப்பு கூறுகள் திட்ட நிதியை முழுமையாக வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தவும், பட்டியல் வகுப்பினர் வளர்ச்சிக் கவுன்சில் அமைக்க அறிவு றுத்தியுள்ளது.
இந்நிலையில் பட்டியல் வகுப்பு படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புபெற போதிய பயிற்சி இல்லாமல் உள்ளனர்.
எனவே, பட்டியல் வகுப்பு இளைஞர்களுக்கு 'பாட்கோ' மூலம் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.