ADDED : செப் 25, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குப்பை அள்ளும் வாகனத்தை சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தேங்காய்திட்டு, வசந்த நகரில் தனியாருக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைந்துள்ளது.
கடந்த 22ம் தேதி இரவு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 குப்பை அள்ளும் வாகனங்களின் முன் பக்க கண்ணாடிகள் மற்றும் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராக்களை பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர் உடைத்து சேதப்படுத்தினர்.
புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.