/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவிகளுக்கான பொது மருத்துவ முகாம்
/
பள்ளி மாணவிகளுக்கான பொது மருத்துவ முகாம்
ADDED : ஜன 23, 2024 11:14 PM

பாகூர் : பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான பொது மருத்துவ முகாம் நடந்தது.
நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடந்த முகாமிற்கு பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிகண்டன் வரவேற்றார்.
தலைமையாசிரியர் வாணி முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் வெற்றிவேல் வாழ்த்தி பேசினார். சூர்யோதை அறக்கட்டளை மூலம் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லுாரி மருத்துவக் குழுவினர், மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்குப் பொது மருத்துவம், கண், எலும்பு, குழந்தைகள் தொடர்பான சிகிச்சை அளித்தனர்.
சூர்யோதை அறக்கட்டளை மண்டல மேலாளர் ஜெயராஜன், நிர்வாகிகள் புஷ்பராஜ், சிவரஞ்சனி மற்றும் ரஹ்மான் பாஷா, நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

