நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் அருகே உள்ள ஓடைவெளி அரசு துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளி பொறுப்பாசிரியர் மங்கையர்கரசி வரவேற்றார். கல்வித்துறை முதன்மை அதிகாரி தனச்செல்வம் நேரு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், போட்டிகளின் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி துணை ஆய்வாளர் லிங்கசாமி, ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

