sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு பள்ளி விரிவுரையாளர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் பள்ளி கல்வித் துறை அறிவிப்பு

/

அரசு பள்ளி விரிவுரையாளர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் பள்ளி கல்வித் துறை அறிவிப்பு

அரசு பள்ளி விரிவுரையாளர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் பள்ளி கல்வித் துறை அறிவிப்பு

அரசு பள்ளி விரிவுரையாளர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் பள்ளி கல்வித் துறை அறிவிப்பு


ADDED : ஜன 19, 2024 07:49 AM

Google News

ADDED : ஜன 19, 2024 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 67 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பதவியான 67 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ள பள்ளி கல்வித் துறை விண்ணப்பம் வரவேற்றுள்ளது.

ஆன்லைன்


இன்று 19 ம்தேதி காலை 10:00 மணி முதல் அடுத்த மாதம் 17ம் தேதி மாலை 5:45 மணி வரை https://recruitment.py.gov.in என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனை டவுண்லோடு செய்து, இயக்குனர், பள்ளி கல்வித் துறை, பெருந்தலைவர் காமராஜர் வளாகம், 100 அடி ரோடு, அண்ணா நகர், புதுச்சேரி-605005 என்ற முகவரிக்கு பதிவு பெறாத விரிவுரையாளர் பதவிக்கு என, குறிப்பிட்டு, பிப்ரவரி 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை


விரிவுரையாளர் பணிக்கு 90 சதவீத மதிப்பெண் கல்வி தகுதி அடிப்படையிலும், 10 சதவீதம் மதிப்பெண் வேலைவாய்ப்பு அலுவலகம் சீனியரிட்டி அடிப்படையில் என, மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு செய்யப்படுவர்.

வயது தளர்வு


விரிவுரையாளர் பணிக்கு 17.02.2024 அன்று 30 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம் பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்.சி.,க்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.

மாற்று திறனாளிகள் 45 வயது வரையும், எஸ்.சி., பிரிவு மாற்றுதிறனாளிகள் 50 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

இட ஒதுக்கீடு


மொத்தமுள்ள 67 விரிவுரையாளர் பணியிடங்களில், பொது-30, ஓ.பி.சி.,-7, எம்.பி.சி.,-12, மீனவர்-1, முஸ்லீம்-1, எஸ்.சி.,-10, இ.டபுள்யூஎஸ்-3 என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

மாற்றுதிறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடாக 3 இடங்கள் உண்டு.பிராந்திய ரீதியாக புதுச்சேரிக்கு-32, காரைக்கால்-12, மாகி-17, ஏனாம்-6 விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பாடங்கள் ரீதியாக தமிழ்-5, ஆங்கிலம்-4, பிரெஞ்சு-4, அரபிக்-1, மலையாளம்-2, கணிதம்-5, இயற்பியல்-5, வேதியியல்-4, தாவரவியல்-3, விலங்கியல்-5, அரசியல் அறிவியல்-5, ேஹாம் சயின்ஸ்-2, வணிகவியல்-8, ஹிந்தி-4, வரலாறு-5, பொருளியல்--2, புவியியல்-2 விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும், சந்தேகங்களுக்கு 0413-2207320 என்ற எண்ணை அலுவலக நாட்களில் காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us