/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தியாகப் பெருஞ்சுவர் பணி: சபாநாயகர் பங்கேற்பு
/
தியாகப் பெருஞ்சுவர் பணி: சபாநாயகர் பங்கேற்பு
ADDED : மார் 26, 2025 04:51 AM

புதுச்சேரி : காராஷ்டிரா மாநிலத்தில் தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பங்கேற்றார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மந்த்ராலயாவில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவில், பாரதத்தின் சுதந்திரப் பவள விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை போற்றும் வகையில் தியாகிகளின் பெயர் பொறித்த தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம், மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், மேலவை தலைவர் ராம் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தியாகப் பெருஞ்சுவர் அமைக்கும் சக்ரா பவுண்டேஷன் நிறுவன நிர்வாகிகள் செய்திருந்தனர்.