தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் ஹாக்கத்தான் நிகழ்ச்சி

வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் ஹாக்கத்தான் நிகழ்ச்சி

வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் ஹாக்கத்தான் நிகழ்ச்சி


ADDED : மார் 23, 2026 10:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 10:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனூர் ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான “ஹாக்கத்தான் 2026” நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஆச்சார்யா வோர்ல்ட் கிளாஸ் எஜூகேஷன் நிறுவனத்தின் தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் குருலிங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு, ஆராய்ச்சக மற்றும் மேம்பாட்டு பிரிவு தலைவர் ஸ்ரீதேவி, கல்வி உள் தர உறுதி மையம் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், வனிதா கோட்டீஸ்வரன், கலைவாணன், வாசுதேவன்,பாலாஜி ஆறுமுகம், முகமது தௌபீக், சுதா குமாரராஜன், ராஜாராஜன், கோட்டீஸ்வரன்,லக்ஷ்மி பிரியா,சதீஷ்குமார், யோகீஸ் குமார்,உமா , துர்கா, ஷ்யாம், அழகிரிசாமி, உத்தமராஜ் தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

ஆச்சார்யா மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் உட்பட 140 அணிகள் கலந்து கொண்டு தங்களின் புதுமையான தொழில்நுட்ப யோசனைகளை முன்வைத்தனர். அதில் 16 சிறந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் முதல் மூன்று அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு தொழில்பயிற்சி இன்டன்ஷிப்ப வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us