/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு போடுவது எப்படி?: தேர்தல் துறை அதிரடி
/
ஓட்டு போடுவது எப்படி?: தேர்தல் துறை அதிரடி
ADDED : ஜன 21, 2024 04:19 AM

புதிய வாக்காளர் பட்டியலின்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 ஆக உயர்ந்துள்ளது.இதில், 18 வயது முதல் 19 வயது வரையுள்ள புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 959 ஆகும்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளி வர உள்ள நிலையில், தேர்தல் துறை விழிப்புணர்வு வாகனத்தை தயார் செய்து வருகிறது. ஈச்சர் லாரியை வாங்கி, பழைய துறைமுக வளாகத்தில் ஓட்டுச்சாவடி போன்று வடிமைத்து வருகிறது.
புதுச்சேரியில் 25 சட்டசபை தொகுதிகளிலும் இந்த விழிப்புணர்வு வாகனம் சென்று முதல் முறையாக ஓட்டு போட உள்ள இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. வரும் 25ம் தேதி நடக்கும் தேசிய வாக்காளர் தினத்தன்று இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தேர்தல் துறை அதிகாரிகள் கூறுகையில், 'அசல் ஓட்டுச்சாவடி போன்று விழிப்புணர்வு வாகனத்தை தயார் செய்துள்ளோம். ஓட்டுச்சாவடி நடைமுறைகள், ஓட்டளிக்கும் முறைகள்,ஜனநாயக கடமை ஆற்றுவது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் முதல் முறை ஓட்டளிக்கும் இளைஞர்கள் தெரிந்து கொள்ளலாம்.
யாருக்கு ஓட்டளித்தோம் என்பதையும் வி.வி.,பாட் மூலம் உறுதி செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது'என்றனர்.

