/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை அண்ணன், தம்பி கைது
/
புதுச்சேரியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை அண்ணன், தம்பி கைது
புதுச்சேரியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை அண்ணன், தம்பி கைது
புதுச்சேரியில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை அண்ணன், தம்பி கைது
ADDED : ஜன 19, 2024 07:27 AM

புதுச்சேரி: புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் ரவுடியை, சகோதரர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்டியார்பாளையம், புது நகரை சேர்தவர்கள் அமீர்கான், 26; ஷாருகான், 25. சகோதரர்கள். இவரகள் நடத்தி வந்த நடன குழுவில் இருந்த தட்சிணாமூர்த்தி நகர் வெற்றி, 25; சமீப காலமாக வரவில்லை.
இதனால், சகோதரர்கள் பேச்சுவார்த்தை நடத்த, வெற்றியை வீட்டிற்கு அழைத்தனர். அதன்பேரில் வெற்றி, தனது நண்பரான திலாசுபேட்டை, நடுத்தெரு அருணகிரிநாதன் மகன் ரவுடி கிேஷார், 27, என்பவரை நேற்றிரவு 7:30 மணிக்கு அழைத்து சென்றார்.
பேச்சு வார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அமிர்கான், ஷாருகான் ஆகி யோர், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கிேஷாரை சுற்றி வளைத்தனர்.
திடுக்கிட்ட கிேஷார் தப்பி ஓட முயன்றார். இருவரும் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை சிதைந்த நிலையில் கிஷோர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வெற்றி அங்கிருந்து தப்பியோடினார்.
தகவல் அறிந்து வந்த எஸ்.பி., பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையிலான போலீசார், கிேஷார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அமீர்கான், ஷாருகானை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காரணம் என்ன
வெற்றியுடன் சென்ற கிஷோரை கண்டு எரிச்சலடைந்த அமீர்கான், ஷாருகான் இருவரும், இவன் என்ன பெரிய ஆளா என கேட்டதோடு, அவரது தாயை ஆபாசமாக பேசினர். ஆத்திரமடைந்த கிஷோர் பதிலுக்கு, அமீர்கார், ஷாருகான் தாய் குறித்து ஆபாசமாக பேசினார். இதனையடுத்து அண்ணன் தம்பி இருவரும் கிேஷாரை வெட்டி கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

