sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குடிநீர் பிரச்னையை சரி செய்ய இந்திய கம்யூ., கோரிக்கை

/

குடிநீர் பிரச்னையை சரி செய்ய இந்திய கம்யூ., கோரிக்கை

குடிநீர் பிரச்னையை சரி செய்ய இந்திய கம்யூ., கோரிக்கை

குடிநீர் பிரச்னையை சரி செய்ய இந்திய கம்யூ., கோரிக்கை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காமராஜர் நகர் தொகுதியில் குடிநீர், மின் அழுத்த பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என இந்திய கம்யூ., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூ., காமராஜர் நகர் தொகுதிக்குழு கூட்டம் சித்தன் குடி இந்திரஜித் படிப்பகத்தில் நடந்தது. தொகுதி துணை செயலாளர் தயாளன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் துரைசெல்வம் கிளை மாநாடுகள், தொகுதி மாநாடு நடத்துவது குறித்து பேசினார்.

கூட்டத்தில் சாமிப்பிள்ளைத்தோட்டம் வெள்ளவாரி வாய்காலையொட்டி தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். வாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.

காமராஜர் நகர் தொகுதியில் குடிநீர், மின் அழுத்த பிரச்னையை சரி செய்ய வேண்டும். தெருவில் குப்பைகளை தினமும் அள்ள வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் நாய், மாடுகளை பிடிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஞானசேகரன், சங்கர், மோகன்தாஸ், சரவணன், சந்திரகுமார், மாதவராமன், கோவிந்தராஜ், சரவணன், அய்யனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar