sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஜே.சி.எம்., அன்னதான திட்டம் துவக்கம்

/

ஜே.சி.எம்., அன்னதான திட்டம் துவக்கம்

ஜே.சி.எம்., அன்னதான திட்டம் துவக்கம்

ஜே.சி.எம்., அன்னதான திட்டம் துவக்கம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஜே.சி.எம்., அன்னதான திட்டம் முதலியார்பேட்டை நே ற்று துவங்கியது.

தமிழகத்தின் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் அரசியலில் தடம் பதித்துள்ளார். அவர் காமராஜ் தொகுதியில் நிற்கிறார். அத்துடன் அவரது ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில், பொதுமக்கள் பசியாறும் வகையில் அன்னதான திட்டத்தை துவக்கியுள்ளார்.

முதலில் காமராஜர் தொகுதியில் இத்திட்டம் துவங்கிய நிலையில் அடுத்து பாகூர் தொகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

கடந்த 45 நாட்களாக இத்தொகுதிகளில் அன்னதானம் நடந்து வருகிறது. மூன்றாம் கட்டமாக முதலியார்பேட்டையில் நேற்று விரிவாக்கம் செய்யப் பட்டு துவங்கியது.

இது குறித்து அமைச்சர் ஜான்குமார் கூறியதாவது:

மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில், இந்த அன்னதான திட்டம் நேற்று முதலியார்பேட்டை தொகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்டு, நைனார்மண்டபம், கடலுார் ரோடு துரைக்கண்ணு அமிர்தம்மாள் திருமண நிலையத்தில் துவக்கப்பட்டுள்ளது.

இங்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்திற்கு ஆறு நாட்கள் தினசரி உணவு வழங்கப்படும். மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, வாரத்திற்கு 3 நாட்கள் அசைவம், 3 நாள் சைவம் என்ற அடிப்டையில் உணவு வழங்கப்படும். பொதுமக்கள் பசியாறலாம்.

அடுத்து இருவாரத்தில் உழவர்கரை தொகுதி ரீனா மகாலில் இத் திட்டம் துவங்கப்படும்.

தொடர்ந்து நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, மங்கலம், திருபுவனை, நெட்டப்பாக்கம் என 15 தொகுதிகளிலும் தினசரி உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்' என் றார்.




    • Dinamalar Events


    Dinamalar