/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் ஊழியர் அடித்துக் கொலை; புதுச்சேரியில் நள்ளிரவில் பயங்கரம்
/
ஜிப்மர் ஊழியர் அடித்துக் கொலை; புதுச்சேரியில் நள்ளிரவில் பயங்கரம்
ஜிப்மர் ஊழியர் அடித்துக் கொலை; புதுச்சேரியில் நள்ளிரவில் பயங்கரம்
ஜிப்மர் ஊழியர் அடித்துக் கொலை; புதுச்சேரியில் நள்ளிரவில் பயங்கரம்
ADDED : பிப் 12, 2024 06:46 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் நள்ளிரவில் ஜிப்மர் ஒப்பந்த ஊழியர் கட்டையால் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி, பிச்சைவீரன்பேட்வடக்கு கிணறு வீதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் மகன் அமுத ஆனந்தன்,28; ஜிப்மரில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அமுத ஆனந்தன் தனது நண்பர்களுடன் பிச்சைவீரன்பேட், ஜான்குமார் நகர் விரிவாக்கத்தில் உள்ள காலிமனையில் மது அருந்தியுள்ளார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் அங்கு வந்தது. இங்கு மது குடிக்கக் கூடாது என, எச்சரித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அமுதஆனந்தனை சூழ்ந்த அந்த கும்பல் சராமரியாக கட்டையால் தாக்கியது. ரத்த வெள்ளத்தில் அமுத ஆனந்தன் மயங்கி விழுந்தார். அங்கிருந்த நண்பர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் கொண்டு செல்லப்பட்டார். அங்குநேற்று காலை 8:00 மணியளவில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன், சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, இரண்டு தனிப்படைகள் அமைத்து, அமுதஆனந்தனை கொலை செய்த கும்பலை தேடி வருகின்றனர்.

