ADDED : நவ 13, 2024 04:18 AM

புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ் டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் லக் ஷ் சோர்ஸ் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில், அந்நிறுவன மனிதவள மேலாளர் யாசிர் மற்றும் குழுவினர் நிறுவனத்தின் விவரங்கள், வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிக்கோள்கள், சம்பளம் குறித்து விளக்கி கூறினர். முகாமில் குழு விவாதம் மற்றும் நேர்முக தேர்வு சுற்றுக்கள் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கல்லுாரி முதல்வர் மலர்க் கண் முகாமை துவக்கி வைத்தார். வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் புதுச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து கல்லுாரியில் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் எம்.ஐ.டி., கல்லுாரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்திருந்தார்.





