/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சவாலை சமாளித்த கருவூலத் துறைக்கு சபாஷ்
/
சவாலை சமாளித்த கருவூலத் துறைக்கு சபாஷ்
ADDED : ஜன 21, 2024 04:18 AM
புதுச்சேரியில் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி முதல், 2022ம் ஆண்டு மார்ச் வரையிலான காலத்திற்கு ஓய்வூதியதாரர்களுக்கு திருத்திய ஓய்வூதிய தொகை வழங்க அனுமதி தரப்பட்டுள்ளது.
இது, 16 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் திருத்திய ஓய்வூதிய தொகை அமல்படுத்தப்படாததால், எதிர்காலத்தில் எட்டாவது ஊதிய குழு பரிந்துரை அறிவிக்கப்படும்போது, அந்த பலனையும் ஓய்வூதியதாரர்கள் பெற முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது திருத்திய ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளதால், அந்த சிக்கலும் தீர்ந்துள்ளது.
மொத்தமுள்ள 16,000 நபர்களில் 14,500 புத்தகங்களை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, அந்தந்த துறைகள் மூலம் இதற்குரிய ரிவிஷன் புரோேபாஷல் பெற்று, இதுவரை 12,570 பென்ஷன்தாரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் தான் 80 சதவீதத்திற்கும் மேல் பணி நிறைவு பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் 20 சதவீத பணிகூட நிறைவேறாத நிலையில், புதுச்சேரி அரசின் கணக்கு மற்றும் கருவூலத் துறை சாதித்துள்ளது.
துறையின் இயக்குனர், கண்காணிப்பாளர்கள் என 20 பேருக்கும் மேற்பட்டோர் இரவு, பகலாக உழைத்தனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் பணிக்கு வந்து கடினமாக பணியாற்றினர்.
16 ஆயிரம் ஓய்வூதியதாரர்களின் திருத்திய ஓய்வூதிய தொகையை வழங்கும் பணிகளை முடித்து, கணக்கு மற்றும் கருவூலத் துறை சபாஷ் பெற்றுள்ளது.

