/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரம்
/
காரைக்கால் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரம்
காரைக்கால் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரம்
காரைக்கால் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரம்
ADDED : மே 26, 2025 12:14 AM

காரைக்கால் : காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் வரும் 5ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
காரைக்கால் சுந்தராம்பாள் உடனுறையும் கைலாசநாதசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.45மணிக்கு நடக்கிறது.
இதற்கான பணிகள் நடந்து வருகிறது. நேற்று திருப்பணிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.,நாஜிம் நேரில் சென்று  ஆய்வு செய்தார். பின்  இது குறித்து கோவில் தனி அதிகாரி காளிதாசன் மற்றும் திருப்பணிக்குழுத்  தலைவர் வெற்றிச்செல்வம்  ஆகிய கூறுகையில். காரைக்கால்  கயிலாசநாதர்  சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் 5ம் தேதி நடக்கிறது.  கோவிலில் பழமை மாறாமல் கருங்கற்களை கொண்டு திருப்பணி நடந்து வருகிறது.
மேலும்  பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அன்னதானம், பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்லும் சிறப்பு வழிகள், முக்கிய இடங்களில் தடுப்புகள் அமைப்பது என அனைத்துப் பணிகளும்  நடந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து வரும்  28ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன்   முதல்கால யாக சாலை  பூஜை துவங்கி நடக்கிறது. தொடர்ந்து நடந்து வரும் யாகசாலை பணிகளை தொடர்ந்து,   வரும் ௫ம் தேதி காலை கும்பாபிேஷகம் நடக்கிறது எனத் தெரிவித்தனர். இதில் திருப்பணிக்குழு உறுப்பினர்கள் புகழேந்தி,  அப்பு,  கோபாலகிருஷ்ணன், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

