Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்குவரத்து போலீஸ் மீது லாரி டிரைவர் தாக்குதல்

 போக்குவரத்து போலீஸ் மீது லாரி டிரைவர் தாக்குதல்

 போக்குவரத்து போலீஸ் மீது லாரி டிரைவர் தாக்குதல்


ADDED : மார் 17, 2026 04:14 AM

Follow on Google

ADDED : மார் 17, 2026 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வெங்கடாலம், பரமகுரு ஆகியோர் நேற்று காலை புதுச்சேரி - கடலுார் சாலை கந்தன்பேட் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கர்நாடக மாநில லாரியை அப்புறப்படுத்த டிரைவரிடம் கூறி உள்ளனர். அவர் மறுக்கவே வெங்கடாலம், நோ பார்க்கின் விதியின் கீழ் அபராதம் விதித்து அதற்கான செலானை டிரைவரிடம் கொடுத்தார்.

லாரி டிரைவர், அதனை கசிக்கி வெங்கடாலத்தின் முகத்தில் ஆவேசத்துடன் வீசி, ஹிந்தியில் ஆபாசமாக திட்டி, யூனிபார்மை பிடித்து இழுத்து தாக்கி உள்ளார். உடனே, பரமகுரு மற்றும் பொது மக்கள், லாரி டிரைவரை மடக்கி பிடித்தனர். தாக்குதலில், காயமடைந்த வெங்கடாலம், கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையதில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் மும்பையை சேர்ந்த லாரி டிரைவர் வினய்குமார் சிங் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap