/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் போலீசுக்கு மிரட்டல் ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
/
பெண் போலீசுக்கு மிரட்டல் ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
பெண் போலீசுக்கு மிரட்டல் ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
பெண் போலீசுக்கு மிரட்டல் ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
ADDED : ஜன 19, 2024 07:40 AM
அரியாங்குப்பம்: பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வீராம்பட்டிணம் சாலையில் நேற்று முன்தினம் அரியாங்குப்பம் பெண் போலீசார் பிருந்தா, மாலதி ஆகியோர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அங்கு நின்ற 4 பேர் பெண் போலீசாரை ஆபாசமாக பேசி, கேலி செய்தனர்.
இதுபற்றி பெண் போலீசார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் 3 பேர் தப்பியோடினர். வீராம்பட்டிணம் சிவாஜி நகர் அரவிந்தன், 28; என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அரவிந்தனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தப்பியோடிய அரியாங்குப்பம் குமார், வீராம்பட்டினம் ரிஷி, ராஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.

