/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு
/
அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு
ADDED : ஜன 23, 2024 11:24 PM

புதுச்சேரி : புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் இதய நோய்கள் குறித்து மருத்துவக் கருத்தரங்கம் நடந்தது.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, சென்னை ப்ரண்டியர் லைப் லைன் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய மருத்துவ கருத்தரங்கை கண்காணிப்பாளர் செவ்வேள் துவக்கி வைத்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமெரிக்கா, ஜான்ஹப்கிங்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் ஷெல்பி குட்டி, குழந்தைகளுக்கு இதய நோய்களுக்கு கொடுக்கப்படும் நவீன மருத்துவ முறைகள், இதய படபடப்புக்கு புதிய சிகிச்சை முறை மற்றும் எக்கோ ஸ்கேன் புதிய பரிசோதனை பயன்பாடு ஆகிவை குறித்து விளக்கினார்.
ப்ரண்டியர் லைப் லைன் மருத்துவமனை துணைத் தலைவர் சந்தியாசெரியன், இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் மணிமாறன், ஆனந்தராஜா, மணிவர்மன், அஜித் அருள்குமார் ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸாபேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் குறைதீர் அதிகாரி ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

