ADDED : ஜூன் 25, 2025 01:17 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசுமனநலத்துறை மற்றும் தேசிய மனநல திட்டம் சார்பில், போலீசாருக்கானமனநல பயிற்சி சிறப்பு முகாம் நடந்தது.
கதிர்காமம், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நடந்த பயிற்சி முகாமை எஸ்.பி., பாஸ்கரன் துவக்கி வைத்தார்.
மருத்துவமனையின் மனநலப்பிரிவு டாக்டர் பாலன், மனநலத்துறை தலைவர் மதன் மற்றும் மருத்துவக் கல்லுாரி இயக்குநர் உதயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில், போலீசார்களுக்கு ஏற்படும் 'மனசோர்வு,பதட்டம்,மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது மற்றும் தற்கொலையைஎவ்வாறு கண்டறிந்து தடுப்பது'என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி., ரங்கநாதன், இன்ஸ்பெக்டர் பங்கஜ்,சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் பயிற்சி முகாமைஒருங்கிணைத்தனர். முகாமில், 350 போலீசார் பங்கேற்றனர். தேசிய மனநலத் திட்ட ஆலோசகர் ராஜா நன்றி கூறினார்.