sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்

/

சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்

சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்

சுவாச மண்டலத்தை உறுதிப்படுத்தும் முறைகள்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த வாரம் பார்த்தமஹாத்யோகா பிராணாயாமத்தின் தொடர்ச்சியான முழுமையான சுவாசப் பயிற்சியை இந்த வாரம் பார்ப்போம்.

முழுமையான சுவாசப் பயிற்சி ஒரு கையை கீழ் மார்பிலும், மற்றொரு கையை நடு மார்பிலும் வைக்கவும். நுரையீரலின் கீழ் பகுதி (முன், பக்கவாட்டு, பின்) நிரம்பும் அளவிற்கு நீண்டு சுவாசிக்கவும். பின்பு நடு மார்பு (முன், பக்கவாட்டு, பின்) நிரம்பும்படி சுவாசிக்கவும்.

வலது கையை மேல் மார்பு பகுதியில் கழுத்துப்பட்டையின் முன்பு வைத்து மேல் நுரையீரல் (முன், பக்கவாட்டு, பின்) பகுதியை நிரப்பவும்.

இவை அனைத்தும் ஒரே நீண்ட, பெரும் சுவாசத்தினால், நிரப்ப வேண்டும். சில விநாடிகளுக்கு காற்றை உள்ளிழுத்துக் கொண்டு, வலது கையை கீழ் மார்புப் பகுதிக்குக் கொண்டு வந்து காற்றை (பின், பக்கவாட்டு, முன் என்ற வரிசையில்) வெளியிடவும்.

அதேபோல் நடு மார்பு (பின், பக்கவாட்டு, முன்), அதன்பிறகு மேல் மார்புப் பகுதி (பின், பக்கவாட்டு மற்றும் முன்) என்ற வரிசையில் செய்ய வேண்டும்.

இதுவே ஒரு முழுமையான மஹாத்யோக பிராணாயாமம் அல்லது பேரலை போன்ற மூச்சி பயிற்சி. ஆரம்பத்தில் இதை 9 முறையும், 6 மாதம் அல்லது ஓராண்டு பயிற்சிக்கு பின் 18 மற்றும் 27 சுற்றுகள் வரை செய்யலாம்.

முதலில் பயிற்சி மேற்கொள்பவர்கள் நுரையீரலின் எந்த பகுதிக்கு காற்றை செலுத்துகிறோம் என்பதற்கேற்றபடி கைகளை அந்த பகுதியில் வைக்க வேண்டும். நன்கு பழகி பிராணாயாமத்தில் தேர்ச்சி பெற்றபின், கைகள் வைப்பதைத் தவிர்த்து, மனதை ஒருநிலைப்படுத்தி, சரியாக அந்தப் பகுதியை மனதில் வைத்துக் கொண்டு காற்றை நிரப்பலாம்.

இதுவே ஹதேனாக்கள் பயிற்சி முறைகளாகும். இந்த பயிற்சிகளை செய்வதன் மூலம் நம் உடலை நீண்ட, மெதுவான, முழுமையான சுவாசத்திற்கு தயார் செய்கிறது.

இதன் மூலம் நுரையீரலின் அனைத்து பகுதிகளும் அதன் முழுமையான திறனிற்கு ஏற்றவாறு இயங்கும்.

இனி, உடலில் சக்தியை பெருக்கி, சமநிலை அடையும் 'லோம விலோம' பயிற்சிகள் குறித்த விளக்கத்தை அடுத்த வாரம் பார்ப்போம்...

பயன்கள்

ஹதேனாக்காள் செய்வதன் மூலம் முழுமையாக சுவாசிக்க முடியும். மேலும், முதுகெலும்பில் தோன்றும் அனைத்து பிரச்னைகளையும் போக்கும் மருத்துவ குணமுள்ள நிலையாகும். மனித உடலில் முதன்முதலில் தோன்றும்பொழுது, முதுகெலும்பின் நிலை இப்படித்தான் நான்கு கால் நிலையிலிருப்பது போல் இருந்தது. அதிகமாக நிற்பது, அதிக அலைச்சல், கடின உழைப்பு போன்றவற்றால் சில உடலுறுப்புகள் கீழிறங்கும் நிலைக்கு உந்தப்படுகிறது. இந்நிலை பயிற்சி செய்வதால், அது தடுக்கப்படும். முன் இருந்த நிலைக்கு செலுத்தப்படும். உடலில் உள்ள அனைத்து இணைப்புகளும் இதனால் வலுவடைகிறது. முக்கியமாக மணிக்கட்டு, கைமுட்டி, கால்முட்டி மற்றும் இடுப்பின் இணைப்புகள் வலுப்பெறும்.






    • Dinamalar Events


    Dinamalar