தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்

 மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்

 மணல் கடத்திய மினி லாரி பறிமுதல்


ADDED : டிச 09, 2025 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2025 05:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, செல்லிப்பட்டு மாரியம்மன் கோவில் வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர். அதில், சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்தி வந்த மினி லாரியை பறிமுதல் செய்தனர். பெரியபாபு சமுத்திரம், குறுக்கு தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ஜெயபால், 39; மீது வழக்குப் பதிந்து கைது சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us