/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர் உறுதி ஊர்காவல்படை வீரர்கள் 'குஷி'
/
அமைச்சர் உறுதி ஊர்காவல்படை வீரர்கள் 'குஷி'
ADDED : ஜன 21, 2024 04:20 AM
புதுச்சேரி போலீஸ் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு 10 ஆண்டு பணி முடித்தால், சிறப்பு நிலை தலைமை காவலர், 15 ஆண்டுகள் முடித்தவருக்கு சிறப்பு நிலை உதவி சப் இன்ஸ்பெக்டர், 25 ஆண்டு பணி முடித்தவருக்கு சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கும் ஆணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதை பின்பற்றி ஐ.ஆர்.பி.என்.,களுக்கும் பதவி உயர்வுக்கான ஆணை அடுத்த நாளே வெளியானது. இது, போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் உள்துறை அமைச்சரை சந்தித்த ஊர்காவல்படை வீரர்கள் தங்களுக்கும் பதவி உயர்வு வழங்க கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, கடந்த 2010ம் ஆண்டு 160 ஊர்காவல்படை வீரர்களுக்கு கான்ஸ்டபிள்களாக பதவி உயர்வை அரசு வழங்கியது. அதை பின்பற்றி கடந்த 2016ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊர்காவல்படை வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
விரைவில் ஊர்காவல்படை வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்க முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதனால், ஊர்காவல்படை வீரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

