/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அளவில் 'பெத்தாங்' போட்டி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
/
மாநில அளவில் 'பெத்தாங்' போட்டி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மாநில அளவில் 'பெத்தாங்' போட்டி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மாநில அளவில் 'பெத்தாங்' போட்டி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ADDED : ஜன 14, 2024 04:14 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் மாநில அளவிலான 'பெத்தாங்' போட்டியில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி மாநில அளவிலான, பெத்தாங் போட்டி, உழவர்கரை அரசு பள்ளியில் மைதானத்தில் நேற்று துவங்கியது.
புதுச்சேரி கார்கில் விளையாட்டு கழகம் சார்பில், நடந்த இப்போட்டியில் சிறப்பு விருந்தினர்கள் பாஸ்கர் எம்.எல்.ஏ., ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் லட்சுமி நாராயணன், ரஷ்யா நாட்டின் பெத்தாங் சங்க தலைவர் அலெக்சாண்டர் கொமராவா ஆகியோர் விளையாட்டு கழகத்தின் கொடி ஏற்றி, போட்டியை துவக்கி வைத்தனர்.
இதில், புதுச்சேரியில் உள்ள 40 கிளப்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், பங்கேற்றனர். வீரர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட உள்ளது. போட்டி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.