ADDED : ஜன 10, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
வில்லியனுார், வள்ளுவன்பேட் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார், 39; இவரது மனைவி நித்யா, 25; இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை செய்கின்றனர். நித்யா தொடர்ந்து மொபைல் போனில் பேசி வந்ததை சதிஷ்குமார் கண்டித்துள்ளார்.
ஜன., 1ம் தேதி வீட்டில் படுத்திருந்த நித்யா தனது குழந்தையுடன் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, சதிஷ்குமார் கொடுத்த புகாரின் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

