/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - தாதர் ரயில் மாற்று பாதையில் இயக்கம்
/
புதுச்சேரி - தாதர் ரயில் மாற்று பாதையில் இயக்கம்
ADDED : ஜன 14, 2024 04:04 AM
புதுச்சேரி : இருப்பு பாதை பராமரிப்பு பணி காரணமாக புதுச்சேரி - தாதர் ரயில் வரும் 17ம் தேதி 10 ரயில் நிலையங்களில் நிற்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி - தாதர் எக்ஸ்பிரஸ் 1,642 கி.மீ., துாரத்தை கடந்து மகாராஷ்டிரா மாநிலம், தாதர் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது. 38 ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
மகாராஷ்ரா மாநிலம் மிராஷ், சங்கிலி நிலைய தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால் வரும் 17ம் தேதி புதுச்சேரியில் இருந்து இரவு 9:30 மணிக்கு புறப்படும் புதுச்சேரி - தாதர் ரயில் (11006) கர்நாடகாவின் பூப்ளி, கடாக், பைபாஸ் ஷாட்கி, சோலாபூர் சந்திப்பு மாற்று இருப்பு பாதை வழியாக திருப்பிவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தார்வாட், அல்னார், லான்டோ, கானாபூர், பெலகவி, காடாபிரபா, மிராஜ், சங்கிலி, காராத், சாடரா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் புதுச்சேரி - தாதர் ரயில் நிற்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தென்னக ரயில்வே திருச்சிராப் பள்ளி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.

